சென்னை:
கடந்த ஆண்டு வீட்டு மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ‘பத்ரா’ பெண் நாய்க்குட்டி தற்போது மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது.

சென்னையில் உள்ள கட்டட மாடியில் இருந்து 2 மருத்துவக் கல்லூரி மாணவர்களால் தூக்கி வீசப்பட்டது. இந்த காட்சி சமூக வளைதளங்களில் பரவி பெரும் வைரலானது. தூக்கி வீசப்பட்ட 5 மாத நாய்குட்டி இற ந்துவிட்டது என்றே பலரும் கருதினர்.
ஆனால் கடுயை£ன காயங்களுடன் அந்த நாய் உயிருக்கு போராடியது. அந்தோணி ரூபின் மற்றும் ஸ்ரவன் கிருஷ்ணன் ஆகிய 2 விலங்கு ஆர்வலர்கள் மீட்டு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அந்த நாய்குட்டி உடல் நலம் தேறியது.

இது தொடர்பாக மருத்துவ மாணவர்கள் ஆசிஷ் பால், சவுதம் சுதர்சன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அந்தோணி நடத்தி வருகிறார். அவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்று போராடி வருகிறார்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு ப்ளூகிராஸ் தன்னார்வலர் கார்த்திக் என்பவர் அந்த நாய்குட்டியை தத்தெடுத்து வீட்டில் வளர்க்க முடிவு செய்தார். ஆரம்பத்தில் இதற்கு அவரது தாயும், சகோதரியும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கார்த்திக் கூறுகையில், ‘‘இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றப்பத்திரி க்கையே கடந்த மார்ச் மாதத்தில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீடியாக்கள் இந்த செய்தியை மறந்துவிட்டதால் நடவடிக்கையிலும் தொய்வு ஏற்பட்டது. மாடியில் இருந்து தூக்கி வீசியதில் பத்ராவுக்கு கொடுங் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு இந்த மாதத்தில் விசாரணை க்கு வரும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில்.‘‘இதர வீடுகளில் நாங்கள் நாய் வளர்ப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் எங்கள் இடத்தில் இல்லை என்று நினைத்தேன். அதன் பிறகு தான் பத்ராவை தத்தெடுத்தேன். இதற்கு முன்பு தெரிவித்த எனது தாய் தான் தற்போது பத்ராவை முழு கவனத்துடன் பராமரித்து வருகிறார்.
அதற்கு வேண்டிய உணவுகளையும் அவர் தான் அளித்து வருகிறார். பத்ரா பிரட் மறறும் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுகிறது. தற்போது மகிழ்ச்சியாவும், ஆரோக்கியமான நிலையில் பத்ரா உள்ளது’’ என்றார்.
[youtube-feed feed=1]