கொழும்பு,
வரும் ஏப்ரல் 9ந்தேதி இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள உள்ள வீடுகளின் சாவிகளை உரிமையாளரிடம் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டு, வீடுகளுக்கான சாவிகளை வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ரஜினிகாந்தும் இலங்கை செல்ல ஆயத்தமானார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சியினிரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக . ரஜினியை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்று லைக்கா நிறுவனம் தனது நிகழ்ச்சி களை ரத்து செய்துவிட்டது.
ரஜினி இலங்கை செல்வதை எதிர்த்து, தொல் திருமாவளவன் மற்றும் வேல்முருகன் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், திருமா மற்றும் வேல்முருகனை கண்டித்து, கொழும்பு நல்லுர் முன்றல் பகுதியில் இன்று (27ந்தேதி) ஈழத்து கலைஞர்கள் அமைப்பு கண்டன போராட்டம் நடத்துகிறது.
இதுகுறித்த கண்டன போஸ்டர்கள் கொழும்பு நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், திருமா, வேல்முருகா ஈழத்தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே,
சுயநலவாதிகளே ஈழத்தமிழன் விஷயத்தில் தலையிடாதே,
கலைஞர்களை கலைஞர்களாக வாழ விடு,
எமது தலைவன் எம்மைக் காண்பை தடுக்க நீங்கள் யார்?
மஹிந்தவிற்க கரங்கொடுத்த உங்களக்கு தலைவனைத் தடுக்க என தகுதி? என அந்த சுவரொட்டிகளில் வாசகங்கள் பதிக்கப்பட்டுள்ளது.