டில்லி

பிரதமர் மோடி தமது இஸ்லாமிய சகோதரிகள் தமக்கு வாக்களிப்பார்கள் என கூறியதற்கு ஆங்கில ஏடான தி பிரிண்ட் கேலி செய்துள்ளது.

இஸ்லாமிய பெண்களுக்கு ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறினால் விவாகரத்து அளிக்கப்படும் என விதிமுறைகள் இருந்தன. பாஜக அரசின் சார்பில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்ட சட்ட மசோதா அனைத்துக் கட்சியினர் ஆதரவுடன் நிறைவேறியது. அதை ஒட்டி இயற்றப்பட்ட சட்டத்தின் படி ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆன்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.

இந்த முத்தலாக் தடை சட்டத்தை பாஜகவினர் பெருமையாக தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகின்றனர். இதை ஒட்டி ஆங்கில ஏடான தி பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில், “கடந்த ஐந்தாம் தேதி அன்று உத்திரப் பிரதேச மாநிலம் பாதோகி தொகுதியில் பேசிய பிரதமர் மோடி தமக்கு தமது இஸ்லாமிய சகோதரிகள் அவசியம் வாக்களிப்பார்கள் எனவும் மற்ற நாடுகளில் உள்ள இஸ்லாமிய சகோதரிகளும் முத்தலாக் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அறிவித்துள்ளர்.

மோடியின் விவாகரத்து செய்யப்படும் இஸ்லாமிய சகோதரிகளின் மீதான அன்பை நாம்வரவேற்கும் அதே வேளையில் பசு பாதுகாவலர்களால் கணவன் கொல்லப்பட்டதால் வாழ்வை இழந்த இஸ்லாமிய சகோதரிகள் மீது ஏன் அவர் கருணை காட்டவில்லை? அந்த பெண்கள் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தினசரி உணவுக்கும் வருந்துகின்றனர். அது குறித்து மோடி ஜியின் கருத்துக்கள் என்ன என்பதை தெரிவிப்பாரா?

இஸ்லாமியர்களை பொறுத்த வரை அரசியல்வாதிகளின் பேச்சில் அவர்கள் மயங்குவதில்லை. ஏற்கனவே ராஜிவ் காந்தி ஷா பானு மற்றும் ராம் ஜன்ம புமி விவகாரத்தில் இரு வேறு போக்கு கொண்டிருந்தார். அத்துடன் அகிலேஷ் யாதவ் 2013 ஆம் வருட இஸ்லாமியர் கலவரத்தில் நடுநிலையாக செயல்படவில்லை. ஆனால் பாஜக அதை விடவே பாரபட்சமாக நடந்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரிகளையும் காஷ்மீர் பொருட்களையும் புறக்கணிக்க மேகாலய ஆளுனரும் பாஜக ஆதரவாளருமான ததகாத்தா ராய் கூறினார். அதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை. லக்னோ மற்றும் பாட்னாவில் காஷ்மீர வியாபாரிகள் தாக்கப்பட்டதற்கும் பிரதமர் மோடி வாய் கூட திறக்கைவ்ல்லை. இதுதான் மோதியின் ராஜ நீதியா என பலரும் கேள்விகள் எழுப்புகின்றனர்.

அயோத்தி விவகாரத்தில் ஒரு புறம் கோவில் அமைப்பேன் என இந்துக்களை சமாதானப்படுத்துவதும் மற்றொரு புறம் அதற்கான நடவடிக்கைகளை எடுகாமல் இஸ்லாமியர்களை திருப்தி செய்வதும் மோடியின் ராஜநீதியா என ஆர்வலர்கள் கேட்டுள்ளனர். இதைப் போல பல பாஜக தலைவர்கள் இஸ்லாமியர்கள் மக்கட்தொகை அதிகரிப்பு குறித்து கண்டனம் தெரிவித்த போது மோடி பேசாமல் இருந்ததும் ராஜ நீதியா?” என சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளது.

[youtube-feed feed=1]