ரேஷனில் வழங்கப்பட உள்ள இலவச மாஸ்க் விலை ரூ.6.45… அமைச்சர் உதயகுமார்

Must read

சென்னை:
மிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ள முகக் கவசம் (மாஸ்க்) விலை ரூ.6.45க்கு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தற்போதைய நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 20ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கவும்,  மக்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கான திட்டத்தை நேற்று முதல்வர் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். அதன்படி ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும்  நபர் ஒருவருக்கு 2 மாஸ்க் வீதம் ரேஷன் கடைகளில் இலவசமாக  வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட உள்ள மாஸ்க் ரூ. 6.45 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு இரண்டு மாஸ்க் வீதம் 4.44 கோடி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.30 கோடியில் இலவச மாஸ்க் வழங்கப்பட இருக்கிறது.

More articles

Latest article