சென்னை:
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றைய விலையை இன்று தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.112 உயர்ந்து உள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சாமான்ய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நம் நாட்டு மக்களுக்கு தங்கம் மீது அலாதி பிரியம் உண்டு. அதை முதலீடாக பலர் சேமித்து வைப்பதும் உண்டு. அதுபோல நடுத்தர வர்க்க மக்களின் நிதி ஆதாரமே தங்கம்தான். தங்கத்தின் மீதான முதலீடு நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5% ஆக அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை உச்சத்தில் பறந்து வருகிறது.
இன்றைய தங்கத்தின் விலை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ..29,816க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,727க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.52.20க்கு விற்பனையாகிறது.
மத்திய அரசின் பொருளாதார கொள்கை காரணமாகவே, தங்கத்தின் விலை மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் உலகளாவிய பொருளதார தேக்கம், டாலருக்கு எதிரான இந்திய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி போன்றவைகள் காரணமாக தங்கத்தின் விலை ஏறி வருவதாக கூறப்படுகிறது.