சென்னை: ஒத்தி வைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு கூட்டம் நாளை (டிசம்பர் 22ந்தேதி) திமுக தலைவரு, முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் சுமார் 400 பேர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.