சென்னை:

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். இவர் ரோந்து சென்ற போது அங்குள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ் அருகே உள்ள பாலத்தின் அடியில் 15 நாடோடி குடும்பங்கள் வசித்து வருவதை கண்டார்.

அந்த குடும்பங்களை சேர்ந்த 3 சிறுவர் சிறுமியர் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பிச்சை எடுப்பதிலும், செயற்கை ஆபரணங்களை விற்பனை செய்வதிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை கண்ட விஜயகுமார் 3 குழந்தைகளையும் மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்தார்.

இது குறித்து விஜயகுமார் கூறுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 3 குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்ததாக அவர்களது பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்ல சீருடை, போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் செலவு ஏற்பட்டது.

இதனால் தொடர்ந்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை ªன்று தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோம். அவர் 3 பேரையும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள சம்மதித்தார்’’ என்றார்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர்களது பெற்றோக்கு போலீசார் எடுத்துக் கூறி அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப சம்மதம் பெற்றனர். அப்பகுதியை சேர்ந்த 6 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழ ந்தைகள் பட்டரவாக்கம் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விஜயகுமார் மேலும் கூறுகையில், ‘‘எங்களது காவலர்கள் அந்த குழந்தைகளை பள்ளிக்கு எங்களது வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். அவர்களை கண்காணிக்க 2 சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அவர்களை எதிர்காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும்’’ என்றார்.

போலீசாரே அவர்களுக்கு சீருடை, புத்தகம், பை. டூத்பிரஷ், பேஸ்ட் உள்ளிட்ட இதர பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.