சென்னை: யுடியூபர் இர்ஃபான் மீது குற்றம் சாட்டி வந்த ‘பிரியாணி மேன் அபிஷேக் என்பவர், பெண் ஒருவர் கொடுத்த புகாரில் வன்கொடுமை சட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.
‘பிரியாணி மேன்’என்று அழைக்கப்படும் பிரபல யூடியூபர் அபிஷேக் ரபீயை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இர்பானும், அபிசேக்கை போலவே கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நிலையில், பிரியாணி மேன் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பது காவல்துறை மீதான நடவடிக்கையை விமர்சிக்க வைத்துள்ளது.
அரசுக்கு எதிரான சாதாரண விமர்சனங்களையே தாங்க முடியாமல் பல்வேறு வழக்குகளில் பலரை விமர்சிப்பவர்களை கைது செய்து வரும் தமிழ்நாடு காவல்துறையினர், சட்டத்தை மீறி, வெளிநாட்டில் தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து, இதை தமிழ்நாட்டில் பிரபலமாக அறிவித்தார். அதனால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய நிலையிலும், அவர் மன்னிப்பு கோரியதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. குற்றம் செய்துவிட்டு மன்னிப்பு கோரினால் விட்டு விடுவார்களா என பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில்தான், யுடியூபர் இர்ஃபானுக்கும், பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் இடையே மோதல் வெடித்து. இர்பான் பிரபலங்களை சந்தித்து சாப்பாடு தொடர்பான வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், பிரியாணி மேனும் அதுபோல பிரபலமாக பல்வேறு உணவு குறித்து வீடியோ வெளியிட்டு வந்தார். யூடியூபர் அபிஷேக் தனது யூடியூப் சேனலில் சுமார் 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கிறார். இவர்களில் வியாபார மோதல் உச்ச மடைந்த நிலையில், அபிசேக் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை பெண் வடுகொடுமை சட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஒருவாரமாகவே, இர்ஃபான், அபிசேக் இடையே ஏற்பட்ட மோதல் ஆபாச லெவலுக்கு சென்றதாகவும், இர்பானுக்கு ஆதரவாக செயல்பட்ட டெய்லர் அக்கா உள்பட சிலரையும் அபிசேக் ஆபாசமாக பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, இர்பான் நண்பர்கள் மற்றும் அவரது மதத்தை சேர்ந்தவர்களால், பிரியாணி மேன் அபிஷேக் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அபிஷேக் நேற்று முன்தினம் தனது சேனலின் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே துணியால் தற்கொலை முயன்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை கண்ட அவரது நண்பர்கள் , உடனே அவரை தொடர்பு கொண்டு தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்து நிறுத்னர். பின்னர், இதை 3 மணி நேரம் வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த சம்பவம் பரபரப்பையும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் அபிசேக்கை கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பரங்கிமலை சைபர் கிரைம் போலீசார்பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த மோதலில் ஈடுபட்ட இர்பானை காவல்துறை கைது செய்யவில்லை என்பதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. காவல்தறை முறையாக செயல்பட்டால் இருவரையும் அழைத்து அல்லது கைது செய்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் யாரோ ஒரு பெண்ணைக் கொண்டு புகார் அளிக்கக வைத்து கைது செய்வது, திமுக அரசின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கை என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.