சென்னை: கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு  என சட்டப்பேரவையில்  தனி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தத் தீர்வாக அமையும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே பட்ஜெட்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,  இன்றைய அமர்வில் கேள்வி நேரம் முடிந்ததும்,  இலங்கை அரசிடம் உள்ள கச்சத்தீவை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

.இலங்கை படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும். இந்தியா  இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.

இலங்கையில் புதிய அரசு அமைந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்கிறது பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார் தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை ஒன்றிய அரசு மறந்து விடுகிறது/ மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் கச்சத்தீவை, மாநில அரசுதான் தாரை வார்த்தது என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது .

கச்சத்தீவு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் கருணாநிதி ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என ஜெயலலிதாவும் தீர்மானம் நிறைவேற்றினார். கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாட்டிற்கு நிரந்தர தீர்வு பாஜக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்காதது வேதனையாக உள்ளது இலங்கை செல்லும் பிரதமர் மோடி, நிரந்தர தீர்வு காண வேண்டும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை, இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு மறந்துவிடுகிறது. எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. கச்சத்தீவை மாநில அரசு தாரை வார்த்ததாக தவறான புரிதல் உள்ளது. வேறு மாநில மீனவர்கள் இப்படி தாக்குதலுக்கு ஆளானால் மத்திய அரசு வேடிக்கை பார்க்குமா?

இதுவரை 74 கடிதங்களை வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியிருக்கிறேன் – வெளியுறவுத்துறை அமைச்சரின் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்தியா, இலங்கை இடையான 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.  நாடிடின் பிரதமராக இந்திரா காந்தியும், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் ஒருங்கிணைந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். இதனால், தமிழக மீனவர்களுக்கு பெரும் பாதிப்புகள் தொடர்கிற நிலையில்,  கச்சத்தீவை மீட்கக்கோரிய பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

அதாவது, 1622-ஆம் ஆண்டு, ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட, சேதுபதி மன்னரால் வெளியிடப்பட்ட செப்பு பட்டயத்தில், கச்சத்தீவையும் தாண்டி, இலங்கையின் தலைமன்னார் கடல் பரப்பு வரை, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்த தீவு சென்னை மாகாணத்தின் கீழ் வந்தது. இதன் பின், 1921-ஆம் ஆண்டில், இந்தியாவும், இலங்கையும் இந்த இடத்தை மீன்பிடிக்க உரிமை கோரின.

சுதந்திரத்திற்குப் பிறகு, 1974-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது ‘இந்தியா-இலங்கை கடல்சார் ஒப்பந்தம்’என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்தார்.

ஒப்பந்தத்தின்போது, சில நிபந்தனைகள் வைக்கப்பட்டன. அதன்படி, இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவதற்கு இந்தத் தீவைப் பயன்படுத்துவார்கள். இந்த தீவில் கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை, இந்தியர்கள் விசா இல்லாமல் பார்க்க அனுமதிக்கப்படுவர். எனினும், இந்தத் தீவில் இருந்து இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க முடியாது.

கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதற்கு, தமிழர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. தமிழக அரசியலில் கச்சத்தீவு விவகாரம் எப்போதும் ஒரு பேசும் பொருளாகவே உள்ளது.

மேலும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது யார் என்ற விவாதம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் நடந்து வருகிறது. ஆனால் கச்சதீவு குறித்து தங்களிடம் யாரும் பேசவில்லை என இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி கடந்தாண்டு தெரிவித்தார்.

சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் இரு நாடுகளுக்கு இடையேயான மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். ஆனால் தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ள நிலையில்,  மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.