சென்னை:
மிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 14-ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக நிதித் துறையை கவனித்துவரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2020-21 ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்தபிப்ரவரி 14-ம் தேதி தாக்கல் செய்தார். அதன்பிறகு மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக கூடிய சட்டப்பேரவைக் கூட்டம், கரோனா ஊரடங்கால் முன்கூட்டியே மார்ச் 24-ம் தேதி முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூடுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூடுகிறது. இக்கூட்டம் 4 நாட்கள்நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில், மறைந்தஉறுப்பினர்களுக்கு இரங்கல்தெரிவிக்கப்பட்டு பேரவைஒத்திவைக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில், துணை பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அரசுக்கு ஏற்படும் எதிர்பாராத செலவுகள், அவசர செலவுகளை ஈடுகட்ட துணை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு பிறகு, கரோனா பாதிப்பால் தமிழக அரசுக்கு ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, 5 மாதங்களுக்கு மேலாக தொடரும் ஊரடங்கால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சூழலில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் துணை மதிப்பீடுகள் வழக்கமானதாக இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.