காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் அத்தி ராவ் ஹைத்ரி. இவர் வருடா வருடம் தனக்கு பிடித்தமான இடங்கள். நாடு களுக்கு செல்வது வழக்கம் இந்த ஆண்டு செல்வதற்காக பெரிய பட்டியல் தயாரித்தி ருந்தார். ஆனால் அது காற்றில் கரைந்து கற்பனையாகிவிட்டது. இந்த ஆண்டு நான் சென்ற ஒரே நாடு கற்பனா என்ற நாட்டுக்குத்தான். எல்லா திட்டமும் ரத்தாகிவிட்டது என்று கூறியிருக்கிறார். அதற்கு காரணம் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாறுபட்ட சூழல்தான் என்கிறார்.
அவர் மேலும் கூறும்போது, ’தற்போது நிலவுவது சுதந்திரம் பறிபோன சூழல். சுதந்திரம் இல்லாத இப்படியொரு சூழலில் வாழ பிடிக்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஒரு சிகிச்சை, ஒரு தடுப்பூசி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன், மக்கள் பயப்படுவதை நிறுத்திவிடு வார்கள். மக்கள் மீண்டும் திரையரங்குக ளுக்கு வருவார்கள், நாங்கள் மீண்டும் படம் செய்ய முடியும். மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை மீண்டும் பெறு வார்கள். கைவினைஞர்கள், தினசரி கூலி தொழிலாளர்கள் உள்ளனர், அவர்க ளின் வாழ்வாதாரம் மீண்டும் சரியான பாதை யில் செல்ல வேண்டும். இதை நம்பாத வர்கள் பலர் உள்ளனர். அந்த மாற்றங்கள் அனைத்தையும் நான் நம்புகிறேன் ” என்று அதிதி கூறினார்.