மாமல்லபுரம்:

மோடி ஜின்பிங் சந்திப்பின்போது, காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்த பழமை வாய்ந்த மாமல்லபுரம் கங்கைகொண்டான் கல் மண்டபம், கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் இடிந்து விழுந்தது.

இந்த பகுதியில் ஏராளமான சாலையோர கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், மலை காரண மாக சாலையோர வியாபாரிகள் கடைகள் ஏதும் போடாததால், அதிஷ்டவசமாக விபத்து ஏதும் ஏற்படவில்லை.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக மாமல்லபுரம் முழுவதும் சிற்பங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் சுத்தப்படுத்தப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  சீன அதிபர் நாடு திரும்பியதும், மாமல்லபுரம் மீண்டும் களையிழந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக, பராமரிப்பின்றி சிதலமடைந்து காணப்பட்ட  பழமை வாய்ந்த கங்கைகொண்டான் கல்மண்டபத்தின்,  மேல் பகுதியில் இருந்த கருங்கற்கள் திடீரென சரிந்து விழுந்தது இடிந்து விழுந்தது.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், அதிர்ச்சி அடைந்ததுடன், அந்த பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்தினர்.

அந்த  கல் மண்டபம் மோடி, ஜின்பிங் சந்திப்பின்போத காவல்துறையின் கட்டுப்பாட்டு  அறையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.