சென்னை: கடந்த 3ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமையை துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2வது நாளான இன்றைய அமர்வில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மதியம் 2மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போது இந்தியக் குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமையை துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை முறையே 144017, 85256 மற்றும் 163370 ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Patrikai.com official YouTube Channel