புதுச்சேரி:
ரும் ஜீன், ஜீலை மாதங்களில், கொரானா பாதிப்பு பத்து மடங்கு அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்திருப்பதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் இன்னும் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கொரோனா குறித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில், புதுச்சேரியில் தற்போது புதிதாக வங்கி பணியாளர், கர்ப்பிணி பெண், வீட்டு வேலை செய்யும் பெண் உள்ளிட்ட 4 பேருக்கு கொரானா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது..தற்போதைய நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 37 பேர் கொரனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் இதுவரை  7043 பேருக்கு கொரோனா தொடர்பாக உமிழ் நீர் சோதனை செய்யப்பட்டது. அதில்,  6910 பேருக்கு கொரானா தொற்று நோய் இல்லை (நெகடிவ்) என ஆய்வு முடிவுகள் வந்துள்ளன.  தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  வரும் 1ந்தேதி முதல் மாநிலத்தில் மேலும்  தளர்வுகள்  வழங்கப்படும் என்பதை மாநில முதல்வர் நாராயணசாமி விரைவில் அறிவிப்பார்.
முக்கியமாக வரும் மாதங்கள் மனழக்காலம் என்பதால்,  கொரோனா  நோயின் தாக்கம்  பத்து மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.  மழைக்காலங்களில், விவசாய பணிகள் தொடங்கப்படும், அப்போது  பொதுமக்கள் நடமாட்டமும் அதிகரிக்கும் என்றார்.
புதுச்சேரி மாநிலத்தை  பொறுத்தவரை திரையரங்குகள் தவிர  ஓட்டல்கள் திறக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறியவர்,  புதுச்சேரி மாநில மக்கள் இனிமேல் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.