ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் எம். ராஜா எனும் மோகன் ராஜா.

தொடர்ந்து எம். குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், தனி ஒருவன் என்று தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரான இயக்குனர் மோகன் ராஜா.

தற்போது தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘காட்பாதர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் இந்த ‘காட்பாதர்’.

இந்தப் படத்தில் பாலிவுட் படவுலகின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

இது குறித்த அறிவிப்பை நடிகர் சிரஞ்சீவி மற்றும் இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் இன்று தங்களது ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா மற்றும் மோகன் ராஜா ஆகியோர் இணைந்து பணியாற்றும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]