டெல்லி: இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும், அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது” என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து, பிரதமர் மோடி பதவி ஏற்றதும், கடந்த 2014-ம் ஆண்டு முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.  இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு வணக்கம் செலுத்தினார். செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றியதும் விமானப்படையினர் ஹெலிக்காப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.  இதனையொட்டி வானில் ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவியபடி சென்றன.

இதன்பின்னர், பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.  அவர் பேசும்போது, இந்த சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் மற்றும் இந்தியா மீது அன்பு கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஒரு புதிய திசையில், ஒரு புதிய தீர்மானத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய தினம் இன்று.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நமது மூவர்ணக்கொடி பெருமை மற்றும் மரியாதையுடன் பறக்கிறது. இந்த சுதந்திரதினத்தில் ஒவ்வொரு இந்தியரையும், இந்தியாவை விரும்புபவர்களையும் நான் வாழ்த்துகிறேன். புதிய தீர்மானத்துடன் புதிய திசையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள் இது. சுதந்திர போராட்டத்தின்போது, நமது சுதந்திரபோராட்ட வீரர்கள் கொடூரம் மற்றும் கொடுமைகளை சந்திக்காத ஆண்டுகளே இல்லை. சுதந்திரபோராட்ட வீரர்களுக்கு நாம் நமது மரியாதையை செலுத்தும் நாள் இன்று, நாம் அவர்களின் நோக்கத்தையும், இந்தியாவிற்கான அவர்களின் கனவையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் அடித்தளத்தை அசைத்த காந்திஜி, பகத்சிங், ராஜ்குரு, ராம்பிரசாத் பிஸ்மில், ராணி லட்சுமி பாய், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அனைத்து விடுதலை போராட்ட வீரர்களுக்கும் நமது நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது’ என்றார்.

இந்த தினத்தில், கடமையை செய்யும் பணியில் தங்களது உயிரை ஈந்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபாசாகேப் அம்பேத்கார், வீர சாவர்க்கர் உள்ளிட்டவர்களுக்கு நாட்டின் குடிமக்கள் நன்றியுடையவர்களாக உள்ளனர். ராணி லட்சுமிபாய் ஆகட்டும், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகன் ஹஜ்ரத் மகால் போன்ற இந்திய பெண்களின் வலிமையை நினைவுகூரும்போது, இந்தியா பெருமையால் நிரம்பி வழிகிறது என கூறியுள்ளார். பிரிட்டிஷ் அரசாட்சியின் அடித்தளத்தினை அசைத்த மங்கள் பாண்டே, தத்யா தோப், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்வாகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் நம்முடைய எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது.

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின்போது, நம்முடைய தேசத்தின் பல்வேறு நாயகர்களை நாம் நினைவுகூர்ந்தோம். ஆகஸ்டு 14-ந்தேதி பிரிவினையின் பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தோம். இன்றைய நாள், கடந்த 75 ஆண்டுகளாக நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல பங்காற்றிய நாட்டின் அனைத்து குடிமக்களையும் நினைவுகூர வேண்டிய நாள். நாட்டு விடுதலைக்காக போராடிய அல்லது தேச கட்டமைப்பு பணியில் ஈடுபட்டவர்களான டாக்டர் ராஜேந்திர பிரசாத், நேருஜி, சர்தார் பட்டேல், எஸ்.பி. முகர்ஜி, லால் பகதூர் சாஸ்த்ரி, தீன்தயாள் உபாத்யாய், ஜே.பி. நாராயண், ராம் மனோகர் லோகியா, வினோபா பாவே, நானாஜி தேஷ்முக், சுப்ரமணிய பாரதி போன்ற பெருந்தகையாளர்களின் முன் தலை வணங்க வேண்டிய தினம் இன்று.

உலகில்  ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில் தான் என்பதை நாம் உலகிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். பஞ்சம் ,போர் ,பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா, ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது, சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது, இந்தியாவின் பன்முகத்தன்மையை அதன் வலிமை ஆகும் , நம் நாடு ஜனநாயகத்தின் வீடு. கடைசி குடிமகனுக்கும் அரசு சலுகைகள் சென்று சேரும் காந்தியின் கனவை அடைவதே எனது குறிக்கோள். மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க நான் என்னையே தியாகம் செய்கிறேன்; வேகமான வளர்ச்சியில், புதிய பாதையில் இந்தியா அடியெடுத்து வைக்கின்ற நாள் இது.  இந்தியா ஜனநாயகத்தின் தாயகம். தனது 75 ஆண்டுகால பயணத்தில் பல சவால்களை சந்தித்ததுடன், தன்னகத்தே விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது என இந்தியா நிரூபித்து உள்ளது.

உலக நாடுகள் தங்கள் பிரச்னையை இந்தியாவின் வழியில் தீர்வுகாண முயல்கிறது. சுதந்திரம் பெற்றுள்ள இந்த 75 ஆண்டுகளில் நாடு பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறது. கடுமையான பேராட்டத்தால் சுதந்திரம் பெற்று வளர்ச்சி பாதையில் நாட்டு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். உலகில் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில்தான் என்பதை நாம் உலகத்திற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். 2047க்குள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். நமது பாரம்பரியத்தின் மீது நாம் பெருமைப்பட வேண்டும். கர்வத்துடன் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அர்ப்பணிக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகும்போது நமது முக்கிய குறிக்கோள்களை அடைந்துகாட்ட வேண்டும். என்னுடன் சேர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம். இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும். நமது குறிக்கோள்கள், எண்ணங்கள் பெரிதாக இருக்க வேண்டும். கனவுகளை நனவாக்கக் கூடிய காலம்இது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழி குறித்தும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவின் அடிமைத்தனத்தின் எந்த ஒரு அடையாளம் இருந்தாலும் அவை துடைத்தெறியப்பட வேண்டும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். இயற்கையை பாதுகாப்பது மற்றும் மகளிர் நலன் ஆகியவற்றில் இந்திய கலாசாரம் முன்னணி வகிக்கிறது என்றார்.

சுதந்திர நாள் விழாவையொட்டி செங்கோட்டையில் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், டிரோன் போன்றவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுதந்திர நாளையொட்டி தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.