சென்னை,

மிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் அமையும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

சிறந்த மாணவர்களுக்கு ஊக்கமளிக்க கல்வியாளர்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் வரவேற்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு புதிய பாடத்திட்டம் குறித்து கருந்தரங்கம் நடைபெற்றது.

இந்த  கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,

கல்வித்துறை வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதாகவும் மத்திய அரசு கொண்டு வரும் போட்டித் தேர்வுகளை சந்திக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு அறிஞர்கள் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், இது கல்வி வளர்ச்சியில் பலவேறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

பள்ளிகல்வி துறையில் தமிழக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது.  கூடுதலாக 200 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றால்.

சிபிஎஸ்இக்கு இணையான பாட திட்டம் தமிழகத்தில் உருவாக்கப்படும் என்றும்,  தமிழக மாணவர்கள் எவ்வித போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாட திட்டம் இருக்கும் என்றார்.

9,10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வைபை வசதியுடன் கம்ப்யூட்டர் வழங்க பரிசீலனை செய்து வருவதாகவும் கூறினார்.

புதிய பாடத் திட்ட கருந்தரங்கில் பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயசந்திரன் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துணைக்கோல் மையம் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, ஜெர்மனி துணை தூதரகம் துணை தூதர் ஆஹிம் பாரிக் உட்பட முன்னாள் இன்னாள் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர்.