ம்ஸ்டர்டாம்

நாடாளுமன்றத்தில் தான் கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால் நெதர்லாந்து பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  இக்கூட்டணி அரசில் மார்க் ருடி பிரதமராகச் செயல்பட்டு வருகிறார்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில், புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா நெதர்லாந்து தாக்கல் செய்யப்பட்டது.  கூட்டணி கட்சிகளுக்குள் இந்த மசோதாவுக்கு ஆதரவும் இருந்தது.  அதே வேளையில் எதிர்ப்பும் நிலவி வந்தது.

இந்த மசோதாவால் நாடாளுமன்றத்தில் கூட்டணிக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் மசோதா தோல்வி அடைந்ததையொட்டி நெதர்லாந்து பிரதமர் பதவியை மார்க் இன்று ராஜினாமா செய்தார்.

தமது பிரதமர் பதவியை  ர்க் ராஜினாமா செய்த நிலையில் 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.