சவூதியில் தமிழக தொழிலாளி மர்ம மரணம்

Must read

ரியாத்:
வூதி அரேபிய நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக தொழிலாளர் ஒருவர் மர்மமாக மரணமடைந்துள்ளார்.
தமிழ்நாடு, புதுக்கோட்டை  மாவட்டம், மணமேல்குடி தாலுகாவில் உள்ள , செம்மனாம்பொட்டல் கிராமத்தை  சேர்ந்த கருப்பையாவின் மகன்  தில்லியப்பன்.
இவர், சவூதி  அரேபியாவில்  தமாம்  பகுதியில்  தகரான்  என்ற  பகுதியில் கபில் என்ற அரபியின் வீட்டில் வேலைக்குச் சென்றார்.

தில்லியப்பன்
தில்லியப்பன்

இவர் கடந்த ஆறாம் தேதி (செவ்வாய்க்கிழமை) என்பர் 06.09.2016 அன்று  இறந்து விட்டதாக  அவரது குடும்பத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.  ஆனால் மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
“சவூதி  அரேபியாவில்  உள்ள  நண்பர்கள் உடனடியாக தகவல் அறிந்து  தில்லியப்பனின் உடலை  தமிழகம் கொண்டு வர உதவ வேண்டும்” என்று அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
b7ad4183-1104-4198-8b02-ee51e8a2ad1f
தில்லியப்பன் சித்தப்பாவான துரைராஜை தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “தில்லியப்பனின் குடும்பம் மிக ஏழ்மயானது. குடும்ப வறுமையினால் அவனால் ஏழாவதுக்கு மேல் படிக்க முடியவில்லை. சவூதி அரேபியாவில் தோட்ட வேலைக்காக இரண்டரை வருடம் முன்பு சென்றான். பெரிய சம்பளம் ஒன்றுமில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பத்து, பன்னிரண்டாயிரம் அனுப்புவான். அவ்வளவுதான்.
அவன் மனைவி முத்தம்மாள் இங்கே கூலி வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த பெண் பெண் ப்ளஸ் டூவும், அடுத்த பெண் பத்தாவதும் படிக்கிறார்கள். கடைசி பையன் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான்.
இப்போது மர்மமான முறையில் தில்லியப்பன் இறந்தது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இதில் இன்னும் சோகம் என்னவென்றால், அவனது உடலை எப்படி இந்தியா கொண்டுவருவது என்று தெரியவில்லை. எங்கள் தொகுதியான அறந்தாங்க எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி (அ.தி.மு.க.)விடமும்,  மணமேல்குடி ஒன்றிய சேர்மேன் சத்யா கார்த்திகேயனிடமும் உதவி கேட்டிருக்கிறோம். உதவுவதாக சொல்லியிருக்கிறார்கள்” என்றார் சோகத்தோடு.
தில்லியப்பன் உடல்  தகரான்   அரசு மருத்துவமனையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவரது பாஸ்போர்ட் எண்: J 3616863.
தில்லியப்பன் உடலை இந்தியா  கொண்டுவர உதவ விருப்பமும், வாய்ப்பும் உள்ளோர் கீழ்க்கண்ட எண்களை தொடர்புகொள்ளவும்:
முருகன் பூவாளூர் :  9626321134
துரைராஜ் செம்மனாம்பொட்டால்: 9486917962

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article