கொழும்பு,

லங்கை அமைச்சரை குரங்கு என விமர்சித்த இலங்கை கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா. என்பதுமே அனைவருக்கும் தெரியும் அவரது ஹேர் ஸ்டைல்.

தனது வேகப்பந்து வீச்சு மூலம் உலக கிரிக்கெட் அணி வீரர்களிடையே பிரபலமானவர் மலிங்கா.

இவர் சமீபத்தில், இலங்கை விளையாட்டு துறை அமைச்சரை குரங்கு என்று விமர்சித்துள்ளார். இது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மலிங்காவிற்கு 6 மாதம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள ஜிம்­பாப்வே உடனான ஒருநாள் தொடரில் மலிங்கா விளையாடுவார் என்றும், ஆனால், ஜிம்பாப்வே தொடரில் அவரது சம்பளத்தில் 50 சதவிகிதம் அபராதமாக பிடித்தம் செய்யப்படும் என்றும்,  தொடர் முடிந்ததில் இருந்து அவருக்கு தடை ஆரம்ம்பமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தடை காரணமாக ஜூலை மாத இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொடரில் லசித் மலிங்கா விளை­யாட மாட்டார்.

சமீபத்தில் பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடி தோல்வியுற்ற இலங்கை அணியின் உடல் தகுதி குறித்து விசா­ரணை நடத்­தப்­படும் என்று இலங்கை விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­தி­ருந்தார்.

இதற்கு பதிலளித்த மலிங்கா “நாற்­கா­லியை அலங்­க­ரிகப்­ப­வர்­களின் விமர்­ச­னத்தை நான் பொருட்­ப­டுத்­த­வில்லை. இது கிளியின் கூடு­பற்றி குரங்கு பேசு­வது போல் இருக்­கி­றது. கிளிக் கூடு பற்றி குரங்­குக்கு என்ன தெரியும்” என்று கூறி இருந்தார்.

லசித் மலிங்­காவின் இந்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இதை­ய­டுத்து மலிங்­க­விடம் விசா­ரணை நடத்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் உத்­த­ர­விட்­டது. விசா­ரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று அதி­காரி ஆஷ்­லிடி சில்வா தலை­மையில் 3 பேர் கொண்ட குழு அமைக்­கப்பட்டு விசாரணை மேற்கொண்டது.

அதையடுத்து மலிங்காவுக்கு 6 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மலிங்காவுக்கு ஒப்பந்தத்தை மீறியதாக ஓராண்டு தடை விதித்து  நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.