லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த 7 பேர் குழு! பிசிசிஐ

மும்பை:

லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த ராஜிவ் சுக்லா தலைமையில்  7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் 7 பேர் கொண்ட குழு பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த குழுவில் தலைவராக  கமிட்டியின் தலைவர் ராஜிவ் சுக்லா இருப்பார்.  உறுப்பினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, டி.சி.மாத்யூ, நபா பட்டாச்சார்ஜி, ஜே ஷா, அனிருத் சவுத்ரி (பிசிசிஐ பொருளாளர்), அமிதாப் சவுத்ரி (ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் இருப்பார்கள் என்றும்,

பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை சுமார் இரண்டேமுக்கால் மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் தலைவர் என்.சீனிவாசனும் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி பிசிசிஐ-ல் லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து ஆராய புதிய கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் சவுத்ரி கூறிய தாவது,

லோதா குழுவின் பரிந்துரைகளை சிறப்பாகவும், வேகமாகவும் அமல்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும்.

இந்தக் கமிட்டி அடுத்த இரண்டு நாள்களில் பணியைத் தொடங்கும். இந்தக் கமிட்டி அறிக்கை அளிக்க 15 நாள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

லோதா கமிட்டியில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளில், முக்கியமாக

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலின்போது ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே இருக்க வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவி யில் இருக்கக்கூடாது, பிசிசிஐ நிர்வாகிகள் ஒரு முறை பதவியில் இருந்துவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது, இந்திய அணியின் தேர்வுக்குழுவில் 3 பேர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பவை லோதா குழுவின் பரிந்துரைகளில் மிக முக்கியமானதாகும்.

இந்த பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தற்போது அமைக்கப்பட்டிருக்கும் புதிய கமிட்டி இதுபேன்ற பரிந்துரைகள் குறித்து பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.

பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் சச்சின், லட்சுமணன் ஆகியோருடன் கங்குலியும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
lodha committee recommendations, bcci arranged 6 person team