மணக்கும் மல்லிகையின் மருத்துவப்பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை

Must read

மல்லிகை
(Jasminum Sambac).

மல்லிகை 200 க்கும் மேற்பட்ட வகைகள் ஆசிய நாடுகளில் சீதோஷ்ணத்தில் வளரும் உயர் ரக நறுமண, மருத்துவ மலராகும்

மருத்துவப் பயன்கள்

இயல்பான பாலுணர்வு (Natural Aphrodisiac ) தூண்டும்  ஒரு தூண்டியாகவும்,  மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் (Eases Stress And Depression ) போக்கும்,  மூளையைத் துடிப்புடன் வைக்கவும், மனம் ஒரு நிலைப்படுத்தவும் உதவும்,

மல்லிகை எண்ணை பயன்பாடுகள்

கிருமி நாசினியாக Innate Antiseptic Properties, இதன் எண்ணெய் ( jasmine Oil) தலை மற்றும் உடலுக்குத் தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து உபயோகிக்கலாம்.

உள் மருந்தாகப் பயன்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கவும் (Anti-Cancerous Agent) உதவுகிறது
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறு, மாதவிடாயால் ஏற்படும் வலி போன்றவற்றினை மல்லிகை பூ குணமாக்குகிறது.

உடலில் உள்ள வலி மற்றும் வீக்கங்களை (Alleviates Pain And Inflammation)  சரி செய்கிறது
மல்லிகை எண்ணெய் இருமல் மற்றும் சளிக்கு இரண்டு மூன்று சொட்டுக்கள் தேனில் கலந்து அருந்தலாம், மல்லிகைப்பூவைச் சுடுதண்ணியில் கொதிக்கவைத்து அந்த நீரை தேநீராக அருந்தலாம்

வாசனை (Aroma)

மூக்கடைப்பு மற்றும் சளி குணமடைய மல்லிகைப்பூ வாசனையும் உதவும், உடல் எடை, சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, சீரண குறைபாடு போன்றவை கட்டுக்குள் வரும், மகப்பேறு வலியை  மல்லிகைக்கொண்டு கசாயத்தினை அருந்தினால் நல்ல பலன் தரும்.

தோல்

மல்லிகை வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தும்போது மன அமைதி கிடைக்கும்.

அரோமா தெரபி (Aroma Therapy)

மல்லிகை எண்ணெய்யை உடலில் தேய்த்துக் குளிக்கும்போது தோல் வறவறப்பு தன்மை குறையும், மேலும் தழும்புகளும், கரும்புள்ளிகளும் மறைகிறது

முடி

மல்லிகைப்பூவைத் தேங்காய் எண்ணெய்யில் சூரிய புடம் போட்டு எண்ணெய்யை வடிகட்டி தலையில் தேய்த்து வர முடி நன்கு வளரும், முடி பலப்படும், நீண்டு வளரும், முடி உதிர்வதைத் தடுக்கும், பேன், பொடுகு, பூஞ்சைக் கிருமிகள்  போன்றவை நீங்கும்.

சித்த மருத்துவம்

போகமிக வுண்டாகும் பொங்குகபங் கட்பிரமை
யாகவன் சூனியம் மண்டுமோ – பாகனையாய்
மன்னு திருவசியம் வாய்க்குஞ் சூ டென்றெவரும்
பன்னுமல்லி கைப்பூவாற் பார்.

குணம்: புணர்ச்சியில் தி விருப்ப முன்
மல்லிகை பூவால் கோழை, கண் மயக்கம், தேக உஷ்ணம்
ஆகிய இவை நீக்கும். லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாம்
உஷ்ணம் என்பர்.

– சித்தர் பாடல்

உபயோகிக்கும் முறை:-நல்லெண்ணெயில் இட்டு,  சூரிய புடம் போட்டு வெயிலில் வைத்து மல்லிகைப்பூ கருத்தபின் வடிகட்டி, சீசாவில் (கண்ணாடிக் குடுவை)வைத்துக் கொண்டு, உடலுக்குத் தடவிவரச் சிறந்த வாசனையும், உற்சாக முண்டாக்கும்.

குறிப்பாகப் பால்கொடுக்கும் பெண்கள்  ,  ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை மார்பில் வைத்துக் கட்ட பால் சுரப்பை அடக்கிவிடும்.

மல்லிகை எண்ணெய்யை வெந்நீரல் விட்டு நீராவிக்குளியலை (Steam Bath, Warm Bath)  கொண்டால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கி நறுமணம் பெறும்

மல்லிகையில் கொடி மல்லிகை, ஊசி மல்லிகை எனப் பல வகைகள் உண்டு.

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS.,PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429 22002

 

More articles

Latest article