ம.பி. மாநிலத்தில் பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வாலிபரும் அதற்காக விமோஷனம் தேடும் வகையில் முதல்வர் சிவராஜ் சிங், கால்களை கழுவிட்ட நபரும் வேறு வேறு நபர்கள் என்று தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரேதச மாநிலத்தில் பழங்குடியின வாலிபர் மீது பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பர்வேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
சித்தி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் என்று கூறப்படும் பர்வேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்த நிலையில் அதே பகுதியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அரசு அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இந்த நிலையில் இடிக்கப்பட்ட வீடு பர்வேஷ் சுக்லாவிற்கு சொந்தமானது என்று கூறப்பட்டது.
அதேவேளையில் பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வாலிபரை வரவழைத்த அம்மாநில பாஜக அரசு முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை வைத்து அவரது கால்களை பத்திரிக்கையாளர்கள் முன் கழுவவைத்து செய்தியாக்கினர்.
மேலும், முதல்வரே என் கால்களைக் கழுவியதால் பர்வேஷ் சுக்லா மீது வேறு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார்.
சீன்ல பெரிய ட்விஸ்ட்!! அந்த வீடியோல இருந்தது அவரே இல்லையாமே…
* சிறுநீர் கழித்த சர்ச்சையை ஆஃப் பண்ண என்ன ஒரு கேவலமான நாடகத்தை நடத்தியிருக்கு பாஜக.. ச்சைக்😤 pic.twitter.com/ZK1E6lySUN
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) July 9, 2023
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபரும் கால்களை கழுவ அழைத்துவரப்பட்ட நபரும் வேறுவேறு நபர்கள் என்பது செய்தியாளர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் பாஜக-வின் பித்தலாட்டம் குறித்து சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
தவிர, பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழிக்கும் வீடியோவில் இருந்தது 16 – 17 வயது மதிக்கத்தக்க சிறுவன்.
~ சங்கிக மொத்த நாட்டு மக்களையும் கிறுக்கன் ஆக்க பாத்திருக்கானுவ🤦 pic.twitter.com/DB2TTFGEcm
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) July 9, 2023
அவன் சிறுவன் என்பதை மறைத்து போக்சோவில் இருந்து தப்பிக்க வாலிபர் என்று கூறப்பட்டது.
பின்னர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது.
ஆனால் முதல்வர் காலை கழுவிவிட்ட நபர் 40 வயது மதிக்கத்தக்க நல்ல மனநிலையுடன் உள்ள நபராக இருக்கிறார். எதை மறைப்பதற்கு அல்லது யாரைக் காப்பாற்ற இந்த நாடகம் ? என்று சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.