சென்னை: வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் புதிய திட்டத்தில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது என  மாநகராட்சி துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

2015 வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்பு, தற்போது சென்னையில் வாழ்ந்து வரும்  ஒவ்வொரு சென்னைவாசிக்கும் பருவமழை குறித்த  அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. . 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழக்க, சென்னையை சின்னாபின்னமாக்கியதற்கு, அதிகாரிகளின் செயலற்ற தன்மையே காரணம் என்ற தகவல் பொதுமக்களி டையே அவநம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும், சாத்தனூர் அணை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்துவிடப்பட்டதால், சில வட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனால், கிராம மக்கள் அமைச்சர்மீது சேற்றை வாரி இறைத்துவீசி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

இதுபோல நிலை ஏற்படுவதை தடுக்கும் வகையில்,   பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள  நீர்நிலைகளை புதுப்பிக்க சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுத்து உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் நகரம் முழுவதும் 210 நீர்நிலைகளை பதிவு செய்துள்ளது. இந்த நீர்நிலைகளில் சில ஒரு ஏக்கருக்கு கீழ் உள்ளன, மற்றவை பெரியவை.  இவற்றை  பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அவர்களின் CSR செயல்பாடுகள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவற்றைக் கண்டறிந்து மீட்டெடுத்து வரும்  முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதுதொடர்பாக  விரிவான கள ஆய்வுகள், மேப்பிங் மற்றும் திட்டமிடல் ஆகியவை மறுசீரமைப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளன. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் நகரம் முழுவதும் நீர்நிலைகள் முதலில் வரைபடமாக்கப்பட்டன.  ,இந்த பணிகள் முடிந்ததும், பல்வேறு அமைப்புகள் மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்கொள்ள சில நிறுவனங்கள்  விருப்பம் தெரிவித்துள்ளன. அதன்படி,  இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, மெட்ராஸ் ரோட்டரி கிளப் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சென்னையின் நீர்நிலைகளை புதுப்பிக்க முன்வந்துள்ளன.

இந்த நிலையில், சென்னையில்  தமிழ்நாடு அரசின்  நீர்வளத்துறை வசமிருந்த வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைப்கப்பட்டு உள்ளது.

மேலும், 6.5 கி.மீ நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் இருக்கும் குறுகிய பாலங்களால் 1700 கன அடி நீர் செல்ல வேண்டிய இடத்தில் 800 கன அடி மட்டுமே செல்வதால், 12 குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்ட நடவடிக்கை

வடபழனி 100 அடி சாலையில் ஒவ்வொரு முறையும் மழையால் தண்ணீர் தேங்குவதற்கு, கால்வாயில் அதிக தண்ணீர் செல்ல முடியாததே காரணமாக இருப்பதால் குறுகிய பாலங்களை இடித்து உயர்த்திக் கட்டப்பட உள்ளன

வரும் 2025 பிப்ரவரி மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.

இதனால் சுமார் 25 லட்சம் மக்கள், மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுக்காக்கப்படுவார்கள் என மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) தெரிவித்து உள்ளார்.

இதேபோல, வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கு தீர்வாக 2.78 கி.மீ தூரத்திற்கு வீராங்கல் ஓடையின் பக்கவாட்டு சுவரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஓடையில் தற்போது செல்லும் தண்ணீரை விட 25% தண்ணீர் கூடுதலாக செல்ல வழிவகை செய்யப்படும்.

வெள்ளத்தைத் தணித்தல், நீர்நிலைகளை புதுப்பித்தல் மற்றும் நீர்நிலைகளை புத்துயிர் பெறுதல் ஆகியவை இந்த முயற்சியின் நோக்கமாகும், இது குடிமை அதிகாரிகள், நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் பாடம் சார்ந்த நிபுணர்கள் ஒன்றிணைந்துள்ளது. நகரைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட்டால்,  எந்தவொரு வெள்ளச் சூழலையும் திறம்பட தடுக்கும் அல்லது குறைந்தபட்சம் சீர்படுத்தும் என நம்பப்படுகிறது.