சென்னை: 2021ம் ஆண்டு ஜனவரி 18ந்தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் முழுமையாக இயங்கும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்து உள்ளார்.

தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜனவரி 18-ஆம் தேதி முதல் முழுமையாக இயங்கும் எனவும், முழுமையான நேரடி விசாரணைகள் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடைபெறும்என்றும், வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் விசாரணை தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel