சென்னை:  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றது என்றும், இது வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும்  வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது,  அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும். வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் புதன், வியாழக்கிழமைகளில் (டிச.18,19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இது, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால்  அடுத்த 3 மணி நேரத்துக்குள் (மாலை 4 மணி வரை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணாக, வடதமிழக கடலோரப் பகுதி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் புதன்கிழமை தரைக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிச.20 வரை தமிழக கடலோர பகுதிகளில்தான் நிலைகொண்டிருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.