அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா 137 வது இடம்

லக அளவில் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 137 வது இடத்துக்கு சென்றுள்ளது. இலங்கை 80வது இடதுக்கு முன்னேறி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும அமைதிக்கான நிறுவனம் நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஆய்வின்படி 141வது இடத்தில் இருந்து இந்தி தற்போது 137 வது இடத்துக்கு வந்துள்ளது.  இந்த ஆய்வு பட்டியலில் மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்றுள்ளது.

அதேபோல் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை வெகுவாக முன்னேறியுள்ள தாகவும் கூறி உள்ளது.

2017ம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வினை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இதில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாமிடத்தை டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன.

இந்தியாவுக்கு 137 வது இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் 152 வது இடத்தையும். ஆப்கானிஸ்தான் 162 வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஆசிய நாடுகளான பூடான் 13வது இடத்திலும், இலங்கை 80 வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறி உள்ளது.


English Summary
The list of peaceful countries: India 137th ranked, Economics and the Institute for Peace