சென்னை:
கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண் டும்”என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இதற்கு முன், ஜூன் 10 வரை தமிழகம் முழுவதும் இறந்தோரின் எண்ணிக்கை வெறும் 326 என்று மூன்றில் ஒரு பங்கு கணக்கை மட்டுமே காட்டினார்கள். இன்னும் எத்தனை அப்பாவி மக்களின் இறப்பினை மறைத்துள்ளீர்கள் பழனிசாமி?

சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய அப்பட்டமான பொய்களுக்கு பின்னர், இந்த அரசு கூறுவதை எல்லாம் மக்கள் எப்படி நம்புவார்கள்?
‘கணக்கிடத் தவறிய’ 444 என்பது வெறும் எண்ணிக்கை இல்லை; ஒவ்வொரு குடும்பத்தின் பேரிழப்பு. இதுவரை கணக்கிடப்படாத இறப்புகள் அனைத்தையும் மொத்தமாக வெளியிட வேண்டும்.
மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஒரே ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி”
சாவைச் சாதனையாக சொன்ன முதல் ஆள் எடப்பாடி பழனிசாமி; அவர் சொல்வது பொய் என அரசாங்க புள்ளிவிவரங்களில்தெரிய வருகிறது”
“முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் ‘கொரோனா பரிசோதனை பண்ணாதே; கொரோனா தொற்று & மரண எண்ணிக்கையை சொல்லாதே’ என்று அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்”
பேரிடர் சூழலில் நேர்மையோடும் அறத்தோடும் செயல்படும் அரசே தேவை; மறைக்கும், மக்களை வஞ்சிக்கும் அரசு அல்ல!
அரசியல் இலாபத்துக்காக எடப்பாடி அரசு மக்களை பலியிடுகிறது” அப்பாவி மக்களின் மரணங்களை மறைத்த எடப்பாடி பழனிசாமி, மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும்”
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.