கோழிக்கோடு:
கேரளாவில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சாலையோரத்தில் படுத்திருந்த நபருக்கு, காவல்துறை யினர் உணவு வழங்க முன்வருகின்றனர். ஆனால், அதை கையில் வாங்க மறுக்கும் அந்த நபர், தனது முகத்தை மற்றொரு கையால் மூடிக்கொண்டு, குறிப்பிட்ட ஒரு இடத்தை வட்டமிட்டு காட்டி, அதில் உணவுப்பொட்டலத்தை வைத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு அகன்று விடுகிறார்.
காவல்துறையினர், அந்த நபர் குறிப்பிட்ட இடத்தில் உணவு பொட்டலத்தையும், தண்ணீர் பாட்டிலையும் வைத்து விட்டு சென்றுவிடுகின்றனர். அதன்பிறகே அந்த நபர், அந்த உணவையும், தண்ணீர் பாட்டிலையும் எடுத்துச்ககொள்கிறார்.
இந்த தரமான சம்பவம் கோழிக்கோட்டில் உள்ள பெரம்ப்ரா காவல் நிலைய வரம்பில் நடந்துள்ளது. உணவு வழங்குவது கேரள காவல்துறையினரின் மனிதநேயமாக இருந்தாலும் சாதாரண தெருவோர மனிதனிடையே கொரோனா விழிப்புணர்வு எந்த அளவுக்கு கேரளாவில் பரவியுள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
கேரள மாநில மக்களிடையே ஏற்பட்டுள்ள கொரோனா விழிப்பு காரணமாகத்தான், இந்தியாவில் முதல் கொரோனா ஏற்பட்ட கேரள மாநிலத்தில் சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரிக்காத வகையில், கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.