டில்லி,
ந்திய ஒலிம்பிக் சங்கம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக கல்மாடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஆயுட்கால தலைவராக கல்மாடி நியமிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்தவித பதிலும் வராததால், கல்மாடி, சவுதாலா இருவரையும் ஆயுட்கால தலைவராக நியமிக்கும் முடிவை திரும்ப பெறும் வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தை இடை நீக்கம் செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
 
கல்மாடி, சவுதாலாவின் நியமனத்திற்கு விளக்கம் தராத, இந்திய ஒலிம்பிக் சங்கத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ‘சஸ்பெண்ட்’ செய்தது.  இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தது.
இதுகுறித்து,  மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கூறுகையில்,’ கல்மாடி, சவுதாலாவை கவுரவ ஆயுட்கால தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை, ஐ.ஓ.ஏ., ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகிறது,” என்றார்.
இப்போதில் இருந்து நிதி உதவி, சிறப்பு சலுகைள் எதையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அரசிடம் இருந்து பெற முடியாது’ என்றார்.
இதற்கிடையே, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசோசியேட் துணைத்தலைவர் நரிந்தர் பாத்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.