சென்னை:

மிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ரூ.56 கோடி அளவில் மதிப்பூதியம் வழங்கப்படாமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.

அவர்களுக்கு உரிய மதிப்பூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, ஏற்கனவே தமிழகத்தில் 29 மாவட்டங்களில் தேர்தல் பணியாற்றிய 67,669 வாக்குச் சாவடி அலுவலர்கள், 6414 கண்காணிப்பாளர்களுக்கு பயணப்படி மற்றும் மதிப்பூதியம் தரப்படாமல் இழத்தடிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து,  தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதிய தொகையான  ரூ 56.08 கோடியை  இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு விடுவிக்கா விட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.