டில்லி

னி துருவமான அண்டார்டிகாவில் ஆய்வு நடத்திய ஒரே பெண் விஞ்ஞானி இந்தியாவை சேர்ந்த மங்களா மணி என்பவர் ஆவார்.

உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ளது அண்டார்டிகா.  இங்கு ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஒரு குழுவை அனுப்பி வைத்திருந்தது.   அண்டார்க்டிகாவில் அமைந்திருந்த இந்திய ஆராய்ச்சி நிலையமான பாரதியில் ஆராய்ச்சிகளை செய்த அந்தக் குழுவில் மங்களா மணி என்னும் ஒரு இந்தியப் பெண் விஞ்ஞானியும் இடம் பெற்றிருந்தார்.    உலகிலேயே அண்டார்டிகாவில் ஆய்வு நடத்திய ஒரே பெண் விமானி என்னும் புகழைப் பெற்ற மஙளா மணி 403 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.

அவரது சாதனைகள் குறித்து ஆங்கில நாளேடான “தி இந்து”வுக்கு மங்களா மணி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு :

”எங்களது குழந்தைப் பருவத்தில் எங்களுக்கு தெரிந்த ஒரே ஊடகம் செய்தித்தாட்கள் மட்டுமே.   அதனால் எங்களை உருவாக்கும் முழுப் பங்கும் பள்ளிகளை சார்ந்ததே.  நான் எனது குடும்பத்தில் ஆறு குழந்தைகளில் மூத்த பெண்.   என்னை படிப்பைத் தவிர வேறு பல துறைகளிலும் பங்கு பெற என் பெற்றோர் என்னை ஊக்குவித்தனர்.    எனக்கு நிறுவயதிலிருந்தே புவியியலில் ஒரு ஆர்வம் இருந்தது.

அதற்கேற்றார்போல் நான் படித்தது பொறியியல்.    அப்போது செய்தித் தாட்களில் நாசா பற்றிய செய்திகளை படித்ததால் நான் விண்வெளி ஆய்வு பணியில் ஈடுபட ஆசை கொண்டேன்.   எனது படிப்பை முடிக்கும் முன்பே என்னுடன் படித்தவர்களில் பலர் பல நிறுவனங்களில் வேலைக்கு சேர எண்ணிய போது நான் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணி புரிய விரும்பினேன்.

இங்கு பணி புரிய வாய்ப்புக் கிடைத்தும் எனது பெற்றோர் என்னை அவ்வளவு தூரம் சென்று பணி புரிய அனுமதிக்கவில்லை.    பிறகு எனது மாமாவின் சிபாரிசினால் எனக்கு பணி புரிய பெற்றோரின் அனுமதி கிடைத்தது.    பிறகு சிறிது சிறிதாக நானே பலவற்றையும் கற்றறிந்தேன்.   எனக்கு என் சீனியர்கள் பலர் உதவினார்கள்.   அவர்களின் உதவியுடன் எனது பணியில் நான் முன்னேறியதால் இந்த அண்டார்க்டிகா ஆய்வுப் பணிக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இதற்காக எனக்கு டில்லி எய்ம்ஸ் சில் விரிவான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.  மேலும் எனக்கு உளவியல் ரீதியான ஆலோசலனைகளும்  தரப்பட்டன.    அட்துடன் பத்ரிநாத் மலைக்கு மேல் சுமார் 10000 அடி உயரத்தில் தங்கி இருவார பயிற்சி அளிக்கப்பட்டது.    பனிமலையில் நடமாட கடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அண்டார்க்டிகாவில் இறங்கிய உடன் நான் அந்த இடத்தின் தோற்றத்தில் முதலில் மெய் மறந்தேன்.   ஆனால் 15 நாட்கள் வரை என்னால் சகஜமாக இருக்க முடியவில்லை.  அதன் பிறகே அங்கு வாழ பழகிக் கொண்டேன்.    முதலில் அந்த இடத்தில் குப்பைகள் சேராமல் கவனித்துக் கொள்ளவும், சேர்ந்த குப்பைகளை அகற்றாவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

உணவை பொருத்தவரை நானே அங்கு சமைத்து மற்றவருக்கும் உதவி உள்ளேன்.   அங்கிருந்த அனைவரும் அதற்கு முன்பு எனக்கு அறிமுகம் இல்லாதவர்களாக இருப்பினும் சிறிது தினங்களுக்குள் நல்ல நண்பர்களாக மாறி விட்டோம்.  அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொண்டோம்.  காய்கறிகள், பழங்கள்,  முட்டைகள், பால் போன்றவை எங்களுக்கு அளிக்கப்பட்டு வந்தன.   பழங்களும் காய்கறிகளும் 2-3 மாதங்கள் வரை அங்கு புதிதாக இருக்கும் அதே போல் 5-6மாதங்கள் வரை கெட்டுப்போகாது.”