டில்லி:

ளவுக்கு அதிகமான பணப் புழக்கம், அதிக அளவிலான ஊழலுக்கு வழி வகுக்கும் பாராளு மன்றத்தில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜனதாதள எம்பியான ராம்பிரிட் மண்டல் பாராளுமன்ற மக்களவை யில், பண மதிப்பிழப்புக்கு பிறகு பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து  கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு எழுப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அளவுக்கு அதிகமான பணப் புழக்கம், ஊழலுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் ராம்பிரிட் மண்டல் பண மதிப்பிழப்பு மற்றும் அதன்பிறகு பண நடமாட்டம் குறித்து   மத்திய நிதித்துறையிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய நிதி அமைச்சசர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

ராம்பிரிட் மண்டலின் கேள்விகள்:

பண மதிப்பிழப்புக்கு பிறகு கடந்த ஆண்டுகளில் நாட்டில் பண சுழச்சி எப்படி உள்ளது?

பணமதிப்பிழப்பு தொடங்கியது முதல் மார்ச் 2019ம் ஆண்டு வரை எவ்வளவு பணம் நாடு முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது?

இதன் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு, மாற்றம் குறித்த விவரங்கள் என்ன?  என 3 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதில்கள்: 

கடந்த 2016ம் ஆண்டு  நவம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பண உபயோகம் அதிகரித்து உள்ளது.

 2016ம் ஆண்டு நவம்பர் 04ந்தேதி  நிலவரப்படி ரூ.17.741 பில்லியன் என்றும், மார்ச் 29, 2019ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.21,137,64 பில்லியன் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும் பொருளாதார ஆய்வு அறிக்கை 2016-17 வால்யூம்-1ல் தெரிவித்துள்ள படி, உலகம் முழுவதும் பணத்திற்கும் அதற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளவர், 

அளவுக்கு அதிகமான பணம் புழக்கம், ஊழலுக்கு வழி வகுக்கும் என்று டிராஸ்பாரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளர்.

நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி பண மதிப்பிழப்பு ( demonetisation) மோடி அரசால் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.