சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு  ‘7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு  ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்றும், அது கட்டாயம் என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில், மருத்துவப் படிப்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா அண்மையில்  நிறைவேற்றப்பட்டது.  இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால்,  நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார். இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் வகையில், 7.5 உள்ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆளுநர் மவுனம் சாதிப்பதால், அவருக்கு உத்தரவிட முடியாத நிலை குறித்து,  நீதிபதியே கண்ணீர் வடித்த சோகமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  மருத்துவப்படிப்புக்கான 7.5% உள்ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கட்டாயம் என தெரிவித்துள்ளனர். மேலும்,  உள்ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாகவும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கும் வரை கலந்தாய்வு நடத்தப்படாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . அதனால், 7.5% உள்ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கட்டாயம் என்றும் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்பதை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தெரிவிக்கும் என்றும் கூறினார்.

[youtube-feed feed=1]