தூத்துக்குடி:

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பிய நிலையில், ஆளுநர் பன்வாரிலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார்.

தூத்துக்குடி சென்றடைந்த அவரை மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரி, போலீஸ் அதிகாரி முரளி ரம்பா, அரசுத்துறை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையுல் ஆளுநர் பன்வாரிலால்  அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க இருக்கிறார்.

அதன்பின்னர்  துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூற திட்டமிருப்பதாகவும் கூறப்படுகிறது.