டில்லி:

ரியானா, டில்லி, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, பா.ஜ.க.  எம்.பி.,க்களை  டில்லியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பிரதமர் சந்தித்தார்.

அப்போது, மோடி பேசியதாவது:

“ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, வணிகர்கள் பலன் அடைந்துள்ளனர். அவர்களின் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டது.

இந்த புதிய வரி விதிப்பு முறையின் பலன், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த சங்கிலித் தொடரை நீடிக்க செய்ய வேண்டும்.

பொது விநியோக திட்டத்தின் கீழ், மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான மானியத் தொகை, சில மாநிலங்களில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டிபாசிட் செய்யப்படுகிறது. இதே நடைமுறை, அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். மூத்த குடிமக்கள், ஏழை, எளியோர் நலன் காக்க, மத்திய அரசு பல திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது.  ஏழைகள் நலனுக்காக, அரசு தொடர்ந்து பணியாற்றும்” என்று பிரதமர் மோடி பேசினார்.