இங்கிலாந்தைச் சேர்ந்த மெட்லின் லங்காஸ்டர் என்ற இளம் பெண் விஞ்ஞானி குட்டி மனித மூளைகளை செயற்கையாக உருவாக்கி ஆய்வு செய்து வருகிறார்.
brain
மெட்லினின் தந்தையும் ஒரு விஞ்ஞானி ஆவார். ஒரு சிறுமியாக தந்தையின் ஆய்வுக்கூடத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் மெட்லின் தந்தையின் நுண்ணோக்கியின் வழியாக மனித மூளையின் நியூரான்களைப் பார்த்திருக்கிறார். அவ்வளவுதான், அந்த காட்சி அவரது பிஞ்சு மனதை அறிவியல் பக்கம் மொத்தமாக ஈர்த்துவிட்டது.
இன்று செயற்கையாக மினி மூளைகளை உருவாக்கி ஆய்வு செய்துவரும் மெட்லின் மனித மூளையில் 10 மில்லியன் நியூரான் செல்கள் உள்ளது, பிரபஞ்சத்திலேயே சிக்கலானதும் அதிசயமானதும் நியூரான்களின் அமைப்புதான் என்கிறார்.
ஆனால் மூளையை ஆய்வு செய்வதுதான் கடினம் என்கிறார். காரின் பானட்டை திறந்து உள்ளே ஆராய்ச்சி செய்வதுபோல மனிதனின் கபாலத்தை திறந்து ஆராய முடியாது. எனவேதான் செயற்கையாக மினி மூளைகளை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறேன் என்கிறார்.