சென்னை:
தமிழக அரசு முழுவதும் பழுதாகி நிற்கிறது என்ற விமர்சித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதை ஜெனரேட்டரை கொண்டுகூட ஸ்டார்ட் செய்ய முடியாது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கேலிக்குரியதாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதும், வாக்குப்பெட்டிகள் அறைக்குள் அத்துமீறி
நுழைந்ததும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் ஒரு சில வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டு இருப்பதற்கும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற 4 தொகுதிகளில் போட்டியிடும் மநீம கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சென்னை விமான நிலை யத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர்களிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விக்கணைகள வீசினர்.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து கூறிய கமல், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது சந்தேகம் எழத்தான் செய்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலை யாக செயல்படவேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பும்கூட, அப்படி பார்க்கும்போது, தேர்தல் ஆணையர் அனைத்து அரசியல் கட்சிகளை அழைத்து பேசி இருக்கவேண்டும்.
ஆனால் வேட்பாளர்களுக்கு மட்டுமே கூறியுள்ளனர்.
அதேப்போன்று மறுதேர்தல் வைத்துள்ள இடங்களில் அந்த ஸ்ட்ராங் ரூமை திறக்கக்கூடாது என்பது எங்கள் வலியுறுத்தல். ஸ்ட்ராங் ரூமை திறந்துவிட்டால் அதன்பெயர் ஸ்ட்ராங்ரூம் அல்ல என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் . ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்தடையால் 5 நோயாளிகள் உயிரிழந்தது குறித்து கூறியவர், இது மிக கேவலமான விஷயம், இன்று சினிமா தியேட்டரில், ஷாப்பிங் மாலில், சிறுவணிக ர்கடைகளில் அநேக இடங்களில் மின்சாரம் இல்லை என்றால் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நோயாளிகள் உயிர்காக்கும் இடத்தில் உள்ள அரசு மருத்துவ மனையில் ஜெனரேட்டர் இல்லாதது பெரும் பிழையாக கருதுகிறேன் என்றவர், ஜெனரேட்டர் இருந்துதான் செயல்படவில்லை, இங்கு எல்லாம் இருந்தும் செயல்படவில்லை என்பதுதானே பிரச்சினையே. அரசே பழுதுப்பட்டிருக்கு என்பதுதான் எங்கள் கூற்று என்று சாடினார்.
இந்த அரசு மொத்தமாக ‘பழுதுபட்டிருக்கிறது, செயல்படவில்லை என்று சொல்கிறேன் என்று திரும்ப கூறியவர், இதை ஜெனரேட்டர் வைத்து எல்லாம் திரும்ப ஸ்டார்ட் செய்ய முடியாது என்றும், டெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்தும் ஸ்டார்ட் செய்ய முடியாது என்றும் கடுமையாக விமர்சித்தார்.