சென்னை: 2025ம் ஆண்டின்  சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன்  தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாளைய கூட்டத்தில் கவர்னர் உரை மட்டுமே இடம்பெறும். இன்றைய கூட்டத்தொடர் காலை 9.30மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளத.

இதையடுத்து,. கவர்னர்  உரையாற்றுவதற்கான அரசின் கொள்கை சார்ந்த குறிப்புகள் தொகுக்கப்பட்டு கவர்னரிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், சாதனை விவரங்கள் கொள்கை சார்ந்த முடிவுகள், செய்துள்ள பணிகள் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.  இதை கவர்னர் முழுமையாக வாசிப்பாரா, அல்லது கடந்த ஆண்டு போல இடையில் நிறுத்திவிட்டு வெளியேறுவாரா என்பது கேள்விக்குரியாக உள்ளது. இன்றைய கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஒத்தி வைக்கப்படும்.

இதையடுத்து இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து, கவர்னர் உரை முடிந்த பிறகு சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி  முடிவு செய்யயும்.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை, வியாழக்கிழமை கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  மேலும்இ,  இந்த கூட்டத் தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முக்கியமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த கூட்டத்தொடர்  எதிர்க்கட்சிகள்,  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை  சம்பவம், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 பணம் வழங்கப்படாதது குறித்தும்  குரல் எழுப்புவார்கள் என தெரிகிறது.