டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில், சபாநாயகர் நியமனம் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி “இண்டியா” கூட்டணி எம்பிக்கள்  அரசியல் சாசன புத்தகத்துடன் பேரணி நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுகவின் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் கைகளில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியபடி பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்து, மூன்றாவது முறையாக  மோடி பிரதமராக மீண்டும்  பதவி ஏற்றுள்ளார்.  அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவி ஏற்கும் வகையிலும், தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளை தொடங்கும் வகையில், 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. முதல் இரு நாட்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர். முதல்கட்டமாக இன்று   280 எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர், நாளை தமிழக எம்பிக்கள்  உள்பட மீதமுள்ளளோர் பதவியேற்பர்.

இதற்கிடையில் தேர்தலின்போது ரூ.1லட்சம் தருவதாக கூறி பொதுமக்களிடம் பத்திரம் வழங்கிய விவகாரத்தில், அதன்முலம் வெற்றிபெற்ற எம்.பி.க்களின் பதவி பறிக்கப்பட வேண்டும் என குடியரசு தலைவருக்கு மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் 136 எம்.பி.க்கள் பதவியேற்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுமீது குடியரசு தலைவர் ஏதாவது உத்தரவு பிறப்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  லோக்சபா தற்காலிக  சபாநாயகர் பொறுப்பு விவகாரத்தில் என்டிஏ அரசுக்கு எதிராக இண்டியா கூட்டணி கொதித்தெழுந்துள்ளது.

பாஜக தலைவர் பர்துஹாரி மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு  ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) எதிர்க்கட்சியான இந்திய அணிக்கும் இடையேயான  சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  மக்களவையில் மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்கும் பாரம்பரியத்தை பாஜக பின்பற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மக்களவையில் மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்கும் பாரம்பரியத்தை பாஜக பின்பற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

அதுபோல, லோக்சபாவின் தற்காலிக துணை சபாநாயக  திமுகவின் டிஆர்பாலு, காங்கிரஸ் கொடிக்குன்னில் சுரேஷ் திரிணாமுல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  இதுதொடர்பாகவும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷை தற்காலிக சபாநாயராக நியமித்து இருக்க வேண்டும். அவ்வாறு  நியமிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இண்டி கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

டெல்லியில் அரசியல் சாசன புத்தகத்துடன் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் பேரணி நடத்தினர். இன்று காலை மக்களவையின் 18-வது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுகவின் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் கைகளில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியபடி பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கூறிய  காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்,  இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை இன்னும் திமிர்பிடித்த அரசாகவே உள்ளது. 8 முறை எம்.பி.யாக இருந்த ஒரு தலித் எம்.பி.யை அவர்கள் முறியடித்தனர். கே.சுரேஷ் தற்காலிக சபாநாயகராக இருந்திருக்க வேண்டும். இது மிகவும் நல்லது. எதிர்க்கட்சி களுடன் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இதுபோன்ற முடிவை எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.