
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இன்றைய மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பபடுகிறது.
இந்நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் வெகுண்டெழுந்த மக்கள், போலீசார் வாகனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தீ வைத்து கொளுத்தினர். ஆட்சி அலுவலக கண்ணாடி கதவு, ஜன்னல் உடைக்கப்பட்டது. இதன் காரணமாக பணிக்கு வந்திருந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மக்கள் போராட்டத்தால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு சொந்தமான 5 மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்புக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதன் காரணமாக அந்த குடியிருப்பு தீயில் எரிந்தது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
[youtube-feed feed=1]