சென்னை:
றைந்த முதல்வர்  ஜெயலலிதாவின்  இறுதி ஊர்வலம் மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார். அதைத்தொடர்ந்து இரவு ஜெயலலிதாவின்  உடனல் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அதையடுத்து அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பிறகு காலை 6 மணிக்கு, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராகுல்காந்தி, முன்னாள், இந்நாள் மத்திய அமைச்சர்கள், மற்றும் பல மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தனி விமானம் மூலம் சென்னை வந்து அஞ்சலி செலுத்தினர்.
மாலை 4.20 மணி  ஜெயலலிதாவின்  உடல் முப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் ஜெயலலிதா உடலை  கண்ணாடி பேழைக்குள் வைத்து, ராணுவ பீரங்கியில் வைத்து,  சரியாக 4.30 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
லட்சக்கணக்கான மக்கள் சாலையின் இரண்டு புறங்களில் நின்றுகொண்டு மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாலை 5.36 மணிக்கு அவரது உடல் எம்ஜிஆர் சமாதி வளாகத்துக்கு வந்தடைந்தது. முப்படை வீரர்கள் அணிவகுத்து செல்ல அவரது உடல் பீரங்கி வண்டியில் இருந்து இறக்கப்பட்டு ராணுவ வீரர்களின் இசை முழங்க இறக்கி வைக்கப்பட்டது.
untitled-24
ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, தமிழக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள்,  மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அதையடுத்து, முப்படையினர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் ஆளுநர் ரோசையா, தமிழக முதல்வர் ஓ.பி.பன்னீர் செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை,  தொடர்ந்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், தமிழக தலைவர் திருநாவுக்கரசர், தமிழக தலைமை செயலாளர் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து முப்படையினர் அணிவகுத்து ஜெயலலிதா மீது போர்த்தப்பட்ட தேசியை கொடியை அகற்றி, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் கொடுத்தனர்.
அதையடுத்து, சசிகலா இறுதி சடங்குக்கான சடங்குகளை தொடங்கினார். இறுதி சடங்குகளை ஐயர் ஒருவர் சொல்ல அதற்கேற்றவாறு இறுதி சடங்குகளை அவர் செய்தார்.
அதைத்தொடர்ந்து முப்படை தளபதிகள் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சந்தன பெட்டி மூடப்பட்டது.
அதையடுத்து 6.05 மணி அளவில் அவரது பெட்டி மூடப்பட்டு ஆணி அறையப்பட்டது. 6.07 மணி அளவில் அவரது உடல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு இருந்த குழிக்குள் இறக்கப்பட்டது.

Jpeg
Jpeg

untitled-3 untitled-5 untitled-2