சென்னை:

பிரபல சின்னத்திரை நடிகை ரேகாவின்  கணவர், தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை  சீரியல்களில் பிரபலமான நடிகை ரேகா. இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.  சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவர் கோபிநாத்துடன் ரேகா வசித்து வருகிறார்.

சீரியல் நடிகை ரேகாவுடன் கணவர் கோபிநாத்

இந்த நிலையில், சமீப காலமாக கோபிநாத்துக்கும், அவர் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள மற்றொரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ரேகாவுக்கும், கோபிநாத்துக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதால், வீட்டைவிட்டு வெளியேறிய கோபிநாத் அலுவலகத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று   அலுவலகம் விடுமுறையாக இருந்த நிலையில், அலுவலகம் சென்ற கோபிநாத், அங்கு  தூக்கு மாட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இன்று காலை வழக்கம்போல அலுவலகம் வந்த ஊழியர்கள் கோபிநாத் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்க  தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபிநாத் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

[youtube-feed feed=1]