போர்ச்சுகீசிய பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ. இவர் திருமணமாகாமலேயே குழந்தை பெற்று வருகிறார்.
வாடகை தாய் மற்றும் காதலி மூலம் 3 மூன்று குழந்தைகளை பெற்றுள்ள அவர், மேலும் குழந்தைகள் பெற விரும்புவதாக கூறப்படுகிறது.
தனது மூத்த மகன், தனக்கு மேலும் தம்பி, தங்கைகள் வேண்டும் என்று அடம்பிடிப்பதாக ரொனால்டோ கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
போர்ச்சுகல் மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளுக்காக விளையாடிய ரோனால்டோ, எப்போதும் ஏழாம் எண் எழுதப்பட்ட ஜெர்சி அணிவது வழக்கம்.
இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை ஆனால், அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
அவரது முன்னாள் காதலிக்கு பிறந்தவர் மகன் கிறிஸ்டியானா. அதன்பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், அவரது மூத்த மகன் கிறிஸ்டியானோ, தனது தந்தையின் லக்கி நம்பரான, ஜெர்சியில் எழுதப்பட்டுள்ள எண்ணுக்கு பொருத்தமாக வீட்டில் 7 சகோதர- சகோதரிகள் வேண்டுமென்று ஆசைப்படுவதாகவும், அவர்களின் ஆசையையை விரைவில் பூர்த்தி செய்ய தான் விரும்புவதாகவும் ரொனால்டோ கூறி உள்ளார்.
ரொனால்டோ தற்போது ஜார்ஜினியாவை சேர்ந்த ரோட்ரிகஸ் என்ற காதலியுடன் சுற்றி வருகிறார். தற்போது, ரோட்ரிக்ஸ் கர்ப்பமாகி உள்ளதாக கூறப்படுகிறது. கூடிய சீக்கிரத்தில் 4வது குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கும் ரொனால்டோ, மேலும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள தான் விரும்புவதாக கூறியுள்ளார்.