கொல்கத்தா:

நரேந்திர மோடி அரசு காலாவதி தேதியை கடந்துவிட்டது. அவர்களால் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.


கொல்கத்தாவில் நடந்த சர்வதேச பெண்கள் தின பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

ரஃபேல் விமான பேரம் தொடர்பான ஒரு ஆவணத்தை காப்பாற்ற முடியாத மோடி அரசு, நாட்டை எப்படி காப்பாற்றும். மோடி ஆட்சிக்கு வந்தபின், காஷ்மீரில் 260 சதவீதம் தீவிரவாத நடவடிக்கை அதிகரித்துள்ளது.

காலாவதியாகிவிட்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை மீட்டெடுக்க முடியாது. புதிய அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததும், காஷ்மீரில் அமைதி மீட்டெடுக்கப்படும்.

நாட்டில் உள்ள அனைத்து பணத்தையும் கொள்ளையடித்து கட்சியில் கொண்டு போய் சேர்த்துவிட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.