வரலாறு முக்கியம் அமைச்சரே..
மூத்த பத்திரிகயாளர் எஸ். கோவிந்தராஜ் Govindaraj Srinivasan அவர்களின் முகநூல் பதிவு:
“(பத்து ஆண்டுகளுக்கு முன் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’க்காக நான் விஜயகாந்தை சந்தித்து பேசியபோது, “ அரசியல் கட்சி தலைவராக மாறியவுடன் நிறைய எதிரிகள் உங்களுக்கு உருவாகி விட்டார்கள் இல்லையா?” என்று கேட்டேன்.
அதற்கு விஜயகாந்த் அளித்த பதில்:
“நான் எந்த எதிரியையும் உருவாக்குவதில்லை. எனது கட்சியின் கொள்கைகளை பொதுக்கூட்டத்தில் சொல்லும் போது சில விஷயங்களை விளக்கிச் சொல்ல வேண்டி வருகிறது. இதற்கு முன்னாள் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்ட வேண்டி வருகிறது. அதை பொறுக்க முடியாதவர்கள் தங்களிடம் உள்ள டிவி, பத்திரிகை பலத்தை வைத்து என்னை கடுமையாக விமர்சிக்கின்றனர். மீடியா பலம் அவர்களிடம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என நினைக்கின்றனர்.
கலைஞர் கைது செய்யப்பட்ட போது, அதிகாலை சன் டிவி செய்தியில் போலீஸாரை மாறன் குத்தியதை காட்டினார்கள். அதன் பின் அந்த காட்சி எடிட் ஆகிவிட்டது. இப்போது கூட அவர்களது தினகரன், தமிழ்முரசு பத்திரிகைகளில் என்னைப் பற்றி செய்தி போடுவதில்லை. போட்டால் நெகட்டீவாக போடுகின்றனர்.
நான் அரசியலுக்கு வருவேன் என அறிவித்த நிலையில், நிறைஞ்ச மனசு சூட்டிங் நடந்த இடத்தில் நடந்த ஒரு சிறு மோட்டார் திருட்டை எத்தனை தடவை சன் டிவியில் போட்டார்கள் தெரியுமா? அப்போதே நான் இவர்களைத் தெரிந்து கொண்டு விட்டேன்.
இப்போது கூட நான் ஒரு சிறு தவறு செய்து மாட்டினேன் என்றால், சன் டிவியில் என்னை பெண்டெடுத்து விடுவார்கள். தொடர்ந்து 24 மணிநேரமும் அதையே காட்ட தயாராக உள்ளனர்.
மூப்பனார் மாதிரி யாருக்கும் பாதக
மில்லாத, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் செய்யத்தான் நான் விரும்புகிறேன். ஆனால், என்னை கார்னர் பண்ணி செய்தியாக்கும் போது, அவர்கள் என் அரசியல் எதிரிகள் போல் தெரிகின்றனர்” என்றார்.”