a

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு தானே காரணம் என்று அத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
“அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் கடந்த நான்கு  நாட்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யத் தொடங்கினர். இதை தடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இணையதளம் மூலமாக புகார் அனுப்பினேன்.
தேர்தல் விதி முறைகளை மீறி வேட்பாளர்கள் பெரும் பணம் செலவு செய்துள்ளனர். எனவே அவர்களை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தேன்.
இந்த புகாரின் அடிப்படையிலேயே அரவக்குறிச்சிசட்டமன்ற தேர்தலை வருகிற 23-ந் தேதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது. எனது புகாரை ஏற்றுக்கொண்டு, சோதனை செய்ததற்கும், தேர்தலை ஒத்திவைத்ததற்கும்  தேர்தல் ஆணையத்திற்கு நன்றி” என்று கூறிய பாஸ்கரன் மேலும் கூறியதாவது:
“அரவக்குறிச்சியில் வாக்களர்களுக்கு ரூ. 1000 முதல் 2 ஆயிரம் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது இதே போல் தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலும் பணம் பட்டு வாடா செய்திருக்கிறார்கள்.  எனவே தமிழகம் முழுதும் சட்டமன்ற தேர்தலையே தள்ளி வைக்க வேண்டும்” என்றார்.