
நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலைியல் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக புகார்களுக்கு ஆளான தொகுதி அரவக்குறிச்சிதான். மிக அதிக தேர்தல் விதிமீறல்கள், சண்முகநாதன், கே.சி.பழனிச்சாமி மற்றும் அவரது மகன் உள்ளிட்டோரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ.1.30 கோடி மதிப்பிலான சேலைகள் பிடிபட்டது போன்ற காரணங்களால் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இங்கு தேர்தல் வரும் 23ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel