சென்னை,

திமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தற்கு டிடிவி தினகரன் ஆதரவு நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எடிப்பாடி, ஓபிஎஸ் தரப்பினர் விபரீதத்தின் எல்லைக்கே சென்று  உள்ளதாகவும், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், எடப்பாடி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்  டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்,

டி.டி.வி தினகரன் நியமனங்கள் செல்லும் என்றும்,  தினகரன் அறிவித்த நிர்வாகிகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நமது எம்ஜிஆர், ஜெயா டிவியை முடிந்தால் கையகப்படுத்தி பார்க்கட்டும். ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை.

மேலும் எடப்பாடி  நிதானம் இழந்து அத்துமீறுவதாகவும், விபரீதத்தின் எல்லைக்கு எடப்பாடி பழனிசாமி போகிறார், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும், இந்த தீர்மானத்தின் காரணமாக யார் 420 என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார் என்றும்  கடுமையாக விமர்சித்தார்.