
நியூயார்க்:
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது.
சமீப நாட்களாக ஹாவாய் தீவுகளின் அமைந்துள்ள லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் கிலாயூவே எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறி வருகிறது. அந்த பகுதியில் சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் வசித்து வந்த 1500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் தென்பகுதியில் பயங்கர நிலநடுக்கமும் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவானதாக அமெரி்க்க புவியியல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel